கயாவில் பிண்டதானம் செய்வதால் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைப்பது ஏன் தெரியுமா

கயாவில் பிண்டதானம் செய்வதால் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைப்பது ஏன் தெரியுமா

புராணங்களின்படி கயா திருத்தலம் கயாசூரன் என்ற அசுரனின் உடல் மீது அமைந்துள்ளது. பிரம்மதேவனிடம் வரம் பெற்ற கயாசூரனை தரிசிப்பவர்கள் அனைவரும் பாவங்கள் நீங்கி சொர்க்கம் சென்றதால், உலக நியதி மாறியது. இதனை சரிசெய்ய மகாவிஷ்ணு யாகத்திற்காக கயாசூரனின் உடலை தானமாகக் கேட்டார். அதற்கு சம்மதித்த அசுரனை விஷ்ணு தனது கதாயுதத்தால் அழுத்தியபோது, அவனது உடல் ஒரு பெரும் பாறையாக மாறியது.

அசுரனின் பக்தியால் மகிழ்ந்த விஷ்ணு, இந்த புனித பூமியில் முன்னோர்களுக்கு பிண்டதானம் செய்பவர்களுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும் என்று வரமளித்தார். இங்கு விஷ்ணு பகவான் கதாதரராக வீற்றிருந்து பக்தர்களின் வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். வாயு மற்றும் கருட புராணங்களின்படி, கயாவில் தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷங்களை நீக்கி, முன்னோர்களின் ஆன்மாவிற்கு அமைதியையும் பிறப்பற்ற நிலையையும் அளிப்பதாக நம்பப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *