உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் மெகா பரிசு அறிவித்தது பிசிசிஐ
March 10, 2026

நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையைத் தக்கவைத்த வீரர்களின் இந்த வெற்றியைப் பாராட்டி, பிசிசிஐ 131 கோடி ரூபாய் ரொக்கப் பரிசை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இறுதிப்போட்டியில் 255 ரன்கள் குவித்து அசத்திய இந்திய அணி, பந்துவீச்சிலும் மிரட்டி நியூசிலாந்தை 159 ரன்களுக்கு சுருட்டியது. கடந்த முறையை விட பரிசுத்தொகையை 6 கோடி ரூபாய் உயர்த்தி வழங்கியதன் மூலம், வீரர்களின் கடின உழைப்பிற்கு பிசிசிஐ உரிய அங்கீகாரம் அளித்துள்ளது.