தமிழக தேர்தல் களத்தில் அதிரடி மாற்றம் டிவி கே விஜய்யுடன் பாஜக ரகசிய பேச்சால் எடப்பாடி அதிர்ச்சி

தமிழக தேர்தல் களத்தில் அதிரடி மாற்றம் டிவி கே விஜய்யுடன் பாஜக ரகசிய பேச்சால் எடப்பாடி அதிர்ச்சி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த பாஜக புதிய வியூகம் வகுத்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பவன் கல்யாண் மூலம் பாஜக மேலிடம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த திடீர் நகர்வு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கூட்டணியில் விஜய் இணைந்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் எழும் என எடப்பாடி அஞ்சுகிறார். அதேவேளையில், சிபிஐ சம்மன் உள்ளிட்ட நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவே விஜய் தரப்பு இத்தகைய செய்திகளை கசியவிடுவதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுக பாஜக உறவில் விரிசல் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *