ஜப்பானில் செட்டிலான ‘என் ராசாவின் மனசிலே’ சிறுவன், காதல் மனைவி கொடுத்த புதிய வாழ்க்கை
March 13, 2026

‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடனமாடிய குழந்தை நட்சத்திரம் நீலகண்டன், இன்று ஜப்பானின் வெற்றிகரமான தொழிலதிபர். ‘போடா போடா புண்ணாக்கு’ பாடல் மூலம் பிரபலமான அவர், தற்போது டோக்கியோவில் ‘நீலா டான்ஸ் ஸ்கூல்’ நடத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகம் வந்த அவர் தனது நெகிழ்ச்சியான பயணத்தைப் பகிர்ந்து கொண்டார்.
கலை நிகழ்ச்சிகளுக்காக ஜப்பான் சென்ற நீலகண்டன், அங்குள்ள கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அங்கேயே தங்கினார். அங்கு ஸ்கை ஏர்லைன்ஸ் அதிகாரி ஃபுமியுடன் காதல் மலர, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து ஜப்பானிய குடியுரிமை பெற்றார். 25 ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தாலும், இன்றும் நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்ட சினிமா நண்பர்களுடன் நட்பைத் தொடர்ந்து வருகிறார்.