ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனிக்கு டிரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஈரானின் அடுத்த உச்ச தலைவராக 56 வயதான மோஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு இந்த நியமனம் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த முடிவில் தமக்கு உடன்பாடில்லை என்று கூறியுள்ள டிரம்ப், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
ஈரானின் எதிர்கால ஆட்சி அதிகாரம் வாஷிங்டனின் அங்கீகாரத்தைச் சார்ந்தே இருக்கக்கூடும் என்று டிரம்ப் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். ராணுவத்துடன் நெருக்கமான தொடர்புடைய மோஜ்தபாவுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடும் நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த புதிய தலைமை மாற்றம் சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.