அபுஜ்மாட் காட்டில் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை; ஒரு வீரர் வீரமரணம்

அபுஜ்மாட் காட்டில் கடும் துப்பாக்கிச் சண்டை: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை; ஒரு வீரர் வீரமரணம்

சத்தீஸ்கரின் அபுஜ்மாட் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரகசியத் தகவலின் அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்தத் தேடுதல் வேட்டையில், இரவு முழுவதும் இருதரப்பிற்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த மோதலில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு வீரர் உயிரிழந்தார். மார்ச் 2026-க்குள் நாட்டை மாவோயிஸ்டுகள் இல்லாத தேசமாக மாற்றும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *