வெங்காயம், தக்காளியைத் தொடர்ந்து தங்கம்! விலைவாசியைக் குறைக்க ஆர்.பி.ஐ எடுத்த அதிரடி முடிவு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பணவீக்க கண்காணிப்புப் பட்டியலில் இப்போது தங்கம் மற்றும் வெள்ளியை சேர்த்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்துள்ள நிலையில், சிறு குறு தொழில்களுக்கான கடன் வரம்பு 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது நேரடியாகத் தங்கத்தின் விலையில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தாது எனத் தெரிகிறது.
புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் டாலர் மதிப்பு வீழ்ச்சியால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த ஓராண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் தங்கம் விலை 1.53 லட்சமாகவும், வெள்ளி விலை 2,40,540 ரூபாயாகவும் உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற சூழல் மற்றும் எரிபொருள் விலை மாற்றங்களுக்கு மத்தியில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.