புல்வாமா தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்தும் ஒட்டுமொத்த தேசம்

புல்வாமா தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்தும் ஒட்டுமொத்த தேசம்

கடந்த 2019 பிப்ரவரி 14 அன்று ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி இந்த கொடூரத்தை நிகழ்த்தினர். இந்த துயரமான சம்பவத்தின் ஏழாம் ஆண்டு நினைவு நாளில் நாடு முழுவதும் உள்ள மக்கள் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் துல்லிய தாக்குதல் நடத்தியது. மேலும் சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வீரர்களின் இந்த உயரிய தியாகம் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இன்று நாடு முழுவதும் இந்த தினம் ஒரு கருப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *