ஐடி துறையில் ஏஐ ஆதிக்கம் 13 லட்சம் ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து

மைக்ரோசாஃப்ட் ஏஐ பிரிவின் தலைவர் முஸ்தபா சுலைமான் விடுத்துள்ள எச்சரிக்கை இந்திய ஐடி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 13 லட்சம் ஊழியர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. எச்எஸ்பிசி அறிக்கையின்படி, தரவு பகுப்பாய்வு மற்றும் திட்ட மேலாண்மை போன்ற பணிகளை செயற்கை நுண்ணறிவு மிக எளிதாகச் செய்து முடிக்கிறது.
ஆந்த்ரோபிக் போன்ற நிறுவனங்கள் மேம்பட்ட ஏஐ கருவிகளை அறிமுகப்படுத்துவதால், வணிகச் செயல்பாடுகள் மற்றும் சட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய மனிதர்களின் தேவை குறைந்து வருகிறது. செலவைக் குறைக்க நிறுவனங்கள் மென்பொருட்களை நாடுகின்றன. படைப்பாற்றல் மிக்க முடிவெடுப்பதில் மனிதர்களின் பங்கு இன்னும் தேவையென்றாலும், சாதாரண அலுவலகப் பணிகள் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன. இந்த தொழில்நுட்ப மாற்றம் இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.