டி20 உலகக்கோப்பையில் வாழ்வா சாவா போராட்டத்தில் இங்கிலாந்து மற்றும் சூப்பர் 8 சுற்றுக்கான மெகா மோதல்

டி20 உலகக்கோப்பையில் வாழ்வா சாவா போராட்டத்தில் இங்கிலாந்து மற்றும் சூப்பர் 8 சுற்றுக்கான மெகா மோதல்

டி20 உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்ளும் இங்கிலாந்து அணி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டும். அதே நேரத்தில், அகமதாபாத்தில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மோதலில் வெற்றி பெறும் அணி நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

முன்னதாக கொழும்பில் நடைபெறும் அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேறும். அயர்லாந்து போட்டி காலை 11 மணிக்கும், இங்கிலாந்து போட்டி மதியம் 3 மணிக்கும், தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான முக்கிய ஆட்டம் இரவு 7 மணிக்கும் தொடங்குகின்றன. இந்த மூன்று போட்டிகளும் தொடரின் அடுத்தக்கட்ட நகர்வை தீர்மானிக்கவுள்ளதால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *