புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிக்கல் டெலிவரி ஊழியர்கள் ஸ்டிரைக் இப்போதே உஷாராக இருங்கள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிக்கல் டெலிவரி ஊழியர்கள் ஸ்டிரைக் இப்போதே உஷாராக இருங்கள்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே இன்று டிசம்பர் 31 அன்று நாடு முழுவதும் உள்ள டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிடும். முறையான ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு கோரி தெலங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்த ஸ்டிரைக் காரணமாக டெலிவரி நேரம் அதிகரிப்பதுடன் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே கடைசி நேர ஏமாற்றத்தைத் தவிர்க்க பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால் ஆன்லைன் செயலிகளை விட நேரடியாக கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதே புத்திசாலித்தனம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *