இந்தியா பாகிஸ்தான் இடையே 2026 இல் போர் மூளும் அமெரிக்க சிந்தனை குழுவின் அதிரடி அறிக்கை

காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாத நடவடிக்கைகளால் 2026 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் ‘கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ்’ (CFR) அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த மே 2025 இல் பஹல்காம் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், அடுத்த ஆண்டில் மீண்டும் மோதல் வெடிக்கக்கூடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை நிபுணர்கள் மற்றும் முன்னாள் தூதர்களின் ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் அமெரிக்காவின் நலன்களையும் பாதிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 இல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகளின் ஊடுருவலே இந்த பதற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.