பணி ஓய்வுக்கு ஒரு நாள் முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் டிஜிபியாக ததாஷா மிஸ்ரா நியமனம்

பணி ஓய்வுக்கு ஒரு நாள் முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் டிஜிபியாக ததாஷா மிஸ்ரா நியமனம்

ஜார்க்கண்ட் காவல்துறையின் வரலாற்றில் முதல் முறையாக ததாஷா மிஸ்ரா என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி நிரந்தர டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1994 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், இன்றுடன் (டிசம்பர் 31) பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே மாநில அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக அனுராக் குப்தா விருப்ப ஓய்வு பெற்றதை அடுத்து, நவம்பர் 6 முதல் ததாஷா மிஸ்ரா பொறுப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்மையான மற்றும் கண்டிப்பான அதிகாரியாக அறியப்படும் ததாஷா மிஸ்ரா, ஒருங்கிணைந்த பீகாரில் ராஞ்சி சிட்டி எஸ்பியாகவும், ஜார்க்கண்டின் பொகாரோ மற்றும் கிரீடி மாவட்டங்களில் எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக பொகாரோவில் பணியாற்றிய போது, நக்சலைட்டுகளின் கோட்டையாக கருதப்பட்ட ஜும்ரா மற்றும் லுகு மலைப்பகுதிகளில் அவர் மேற்கொண்ட அதிரடி வேட்டைகள் நக்சலைட்டுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தின. ஒடிசாவைச் சேர்ந்த இவர், ஜார்க்கண்ட் ஆயுதப்படை கமாண்டன்ட் மற்றும் ரயில்வே ஏடிஜி என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து முத்திரை பதித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *