தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டாம் என விஜய்க்கு ஜான் ஆரோக்யசாமி எச்சரிக்கை
March 11, 2026

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இணைவது தற்கொலைக்கு சமம் என்று அக்கட்சியின் ஆலோசகர் ஜான் ஆரோக்யசாமி விஜயை எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை தவெக இழக்க நேரிடும் என்று ஆரோக்யசாமி அஞ்சுகிறார். தற்போதைய சூழலில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும், தேவையற்ற கூட்டணிகள் கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதனால் விஜய் எடுக்கும் அடுத்தகட்ட முடிவு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.