பட்டா வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த முன்னாள் விசிக நிர்வாகி

பட்டா வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த முன்னாள் விசிக நிர்வாகி

கோவை காரமடை அருகே பஞ்சமி நிலத்தில் வசித்து வரும் அருந்ததியின மக்களிடம் பட்டா மற்றும் தண்ணீர் வசதி பெற்றுத் தருவதாகக் கூறி, முன்னாள் விசிக நிர்வாகி சித்தார்த்தன் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திடமும் தலா 2 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததோடு, கடந்த ஆறு ஆண்டுகளாக மாதாந்திர சந்தாவும் பெற்று வந்ததாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பணம் தர மறுக்கும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி மனு அளிக்கப்பட்ட நிலையில், உரிய விசாரணை நடத்தப்படும் எனப் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *