தாரிக் ரஹ்மான் தலைமையில் மீண்டும் ஆட்சியை பிடிக்குமா பிஎன்பி கட்சி

வங்கதேசத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 13வது நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஆரம்பகட்ட நிலவரப்படி தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி 27 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கி நகர்கிறது. ஜமாத் கூட்டணி 10 இடங்களிலும் மற்றவர்கள் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளனர். ஷேக் ஹசீனாவுக்கு பிந்தைய இந்தத் தேர்தலில் 299 தொகுதிகளில் சுமார் 12 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
ஆட்சி அமைக்கத் தேவையான 151 இடங்களை பிஎன்பி கூட்டணி எட்டுமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. தலைமை ஆலோசகர் டாக்டர் முகமது யூனுஸ் மற்றும் பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் ஆகியோர் ஒரே மையத்தில் வாக்களித்தனர். தற்போது வங்கதேசம் முழுவதும் இறுதி முடிவுகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. யார் அடுத்த அரசை அமைப்பார்கள் என்ற விவாதம் மக்கள் மத்தியில் தீவிரம் அடைந்துள்ளது.