பாலிவுட் நட்சத்திரங்கள் கொடுத்த கோடிக்கணக்கான நிதியால் திங்கட்கிழமை வெளியாகிறாரா ராஜ்பால் யாதவ்

பாலிவுட் நட்சத்திரங்கள் கொடுத்த கோடிக்கணக்கான நிதியால் திங்கட்கிழமை வெளியாகிறாரா ராஜ்பால் யாதவ்

காசோலை மோசடி வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ராஜ்பால் யாதவின் விடுதலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாக்கியுள்ள 9 கோடி ரூபாயில் சுமார் 2.5 கோடி ரூபாயை அவரது வழக்கறிஞர் செலுத்தியுள்ளார். இந்த பெரும் தொகையைத் திரட்ட சல்மான் கான், அஜய் தேவ்கன் மற்றும் சோனு சூட் போன்ற முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் நிதியுதவி செய்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு படம் எடுப்பதற்காக வாங்கிய கடனால் சிறையிலுள்ள ராஜ்பாலின் விடுதலை குறித்து திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணை நடைபெறவுள்ளது. கணிசமான தொகை செலுத்தப்பட்டுள்ளதால் அவர் ஜாமீனில் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். சக நடிகர்களின் இந்த கூட்டு முயற்சியால் ராஜ்பால் யாதவ் மீண்டும் திரையுலகிற்கு திரும்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *