டின்னர் சாப்பிட அழைப்பு விடுத்து வெளிநாட்டு பெண்ணை ஹோட்டலில் சீரழித்த கொடூரம்

டின்னர் சாப்பிட அழைப்பு விடுத்து வெளிநாட்டு பெண்ணை ஹோட்டலில் சீரழித்த கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் வேலை நிமித்தமாக தங்கியிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி ஒரு ஈவென்ட் மேனேஜர் அந்தப் பெண்ணை இரவு உணவிற்காக ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அறைக்குள் வைத்து அப்பெண்ணை வலுக்கட்டாயமாக சீரழித்ததாகக் கூறப்படுகிறது.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே உதய்பூர் மற்றும் சூரு பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் வெளிநாட்டுப் பெண்களுக்கு எதிராக நடந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *