திருமண வாழ்க்கை கசக்காமல் இருக்க கணவரிடம் இந்த 3 விஷயங்களை ஒருபோதும் சொல்லாதீர்கள்

திருமண வாழ்க்கை கசக்காமல் இருக்க கணவரிடம் இந்த 3 விஷயங்களை ஒருபோதும் சொல்லாதீர்கள்

ஆச்சார்யா சாணக்கியரின் கொள்கைப்படி, ஒரு பெண் தனது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல சில ரகசியங்களை கணவரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. குறிப்பாக, புகுந்த வீட்டின் குறைகளையோ அல்லது மாமியார் தொடர்பான ரகசியங்களையோ கணவரிடம் கூறினால், அது தேவையற்ற வாக்குவாதங்களுக்கும் குடும்பப் பிரிவினைக்கும் வழிவகுக்கும். அதேபோல், ஒரு பெண் செய்யும் தான தர்மங்கள் ரகசியமாக இருக்கும்போது மட்டுமே அதன் முழு பலன் கிடைக்கும் என்பதால், அதை கணவரிடம்கூட தம்பட்டம் அடிக்கக்கூடாது.

குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பிற்காக மனைவி சிறுகச் சிறுகச் சேர்க்கும் சேமிப்பை கணவரிடம் மறைத்து வைப்பதே நல்லது என்று சாணக்கிய நீநி கூறுகிறது. இக்கட்டான காலக்கட்டத்தில் இந்த ரகசிய சேமிப்புதான் குடும்பத்தைக் காக்கும் பெரும் துணையாக நிற்கும். மேலும், கணவரை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்ப்பதும், கோபத்தைக் கட்டுப்படுத்தி கனிவாக நடப்பதும் தம்பதியிடையே பிணைப்பை வலுப்படுத்தும். இந்த ரகசியங்களைப் பேணுவது உங்கள் இல்லற வாழ்வை இனிமையாக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *