சிபிஐ விசாரணை வளையத்தில் செந்தில் பாலாஜி மார்ச் 17-ல் ஆஜர்
March 10, 2026

கரூரில் கடந்த ஆண்டு த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் நிகழ்ந்த நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வரும் மார்ச் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதே வழக்கில் ஆஜராக நடிகர் விஜய்க்கு உத்தரவிடப்பட்ட நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக அவர் கால அவகாசம் கோரியுள்ளார். மேலும் டெல்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக அனுமதிக்குமாறு அவர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிபிஐ முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.