கால்பந்து மைதானமே போர்க்களமாக மாறி ஒரே போட்டியில் 23 சிவப்பு அட்டைகள் காட்டப்பட்ட சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

கால்பந்து மைதானமே போர்க்களமாக மாறி ஒரே போட்டியில் 23 சிவப்பு அட்டைகள் காட்டப்பட்ட சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

பிரேசிலில் நடைபெற்ற கேம்பியோனாடோ மினெய்ரோ இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மினெய்ரோ மற்றும் குரூஸிரோ அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. குரூஸிரோ அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், போட்டியின் கடைசி நிமிடங்களில் வீரர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு மற்றும் அடிதடியால் மைதானம் ரத்தக் களரியானது. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் மைதானத்திற்குள் நுழைய வேண்டியிருந்தது.

இந்த வன்முறைச் சம்பவத்திற்காக நடுவர் மேத்யூஸ் டெல்கடோ வரலாற்றுச் சாதனையாக 23 வீரர்களுக்கு சிவப்பு அட்டை காட்டினார். இதில் நட்சத்திர வீரர் ஹல்க் உட்பட குரூஸிரோ அணியின் 12 வீரர்களும் மினெய்ரோ அணியின் 11 வீரர்களும் வெளியேற்றப்பட்டனர். கால்பந்தின் அழகைக் குலைக்கும் இந்த அநாகரீகமான செயல் சர்வதேச விளையாட்டு ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *