ஈரான் எண்ணெய் விநியோகத்தைத் தடுத்தால் 20 மடங்கு வலுவான தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் எச்சரிக்கை
March 10, 2026

ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்திற்கு ஈரான் தடையை ஏற்படுத்தினால், அந்த நாட்டின் மீது இதுவரை கண்டிராத வகையில் 20 மடங்கு சக்திவாய்ந்த ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை அமெரிக்கா அழிக்கும் என்றும், அதிலிருந்து மீண்டு வருவது அந்த நாட்டுக்கு கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க, சில நாடுகள் மீதான இறக்குமதி தடையை நீக்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். எரிசக்தி சந்தையை நிலைநிறுத்தும் இந்த நடவடிக்கை உலக நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கும் ஒரு பெரிய ‘பரிசு’ என்று அவர் கூறியுள்ளார். இந்த அதிரடி முடிவுகள் மூலம் பதற்றம் விரைவில் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.