கல்லூரி மாணவனைக் கொல்ல 6 லட்சம் பேரம் பேசிய தாய், மகனின் உயிரைப் பறித்த அந்த பகீர் முடிவு

ஆந்திர மாநிலத்தில் மதுப் பழக்கத்திற்கு அடிமையான தனது 22 வயது மகனை கொலை செய்யத் தாயே கூலிப்படை அமைத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எம்.பி.ஏ படித்து வந்த ஜெயப்பிரகாஷ் ரெட்டி, மது அருந்துவதற்காகத் தொடர்ந்து பணம் கேட்டுத் தொல்லை கொடுத்து வந்ததால், ஆத்திரமடைந்த தாய் ஷியாமளா அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக மகேஷ் என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் பேரம் பேசி, முன்பணமாக 50 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார்.
கடந்த நவம்பர் 7-ஆம் தேதி நெடுஞ்சாலையோரம் ஜெயப்பிரகாஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. முதலில் மர்ம மரணம் என்று கருதப்பட்ட நிலையில், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் செல்போன் அழைப்புகள் மூலம் உண்மை அம்பலமானது. இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட தாய் ஷியாமளா, இடைத்தரகர் மகேஷ் உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.