உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் ஆனால் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிக்க முடிவு

பாகிஸ்தான் அரசு 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணி பங்கேற்பதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட அனுமதி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு முக்கியச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும் 2026 பிப்ரவரி 15 அன்று இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்று அந்த அறிக்கையில் அதிரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதால் இந்த உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முடிவு சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.