நாடாளுமன்றத்தில் இன்று அனல் பறக்கும் விவாதம் குடியரசுத் தலைவர் உரைக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுப்பாரா

நாடாளுமன்றத்தில் இன்று அனல் பறக்கும் விவாதம் குடியரசுத் தலைவர் உரைக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுப்பாரா

மக்களவையில் இன்று மதியம் 12 மணி முதல் குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதம் தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த விவாதத்தை பாஜக சார்பில் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பதிவு செய்ய உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் பதிலளிக்கப் போவதாக ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ராகுல் காந்தியின் உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *