ஈரானில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில் ஆர்மீனியா வழியாக தாயகம் திரும்பும் 100 இந்திய மாணவர்கள்
March 11, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் சூழலால் அங்கு சிக்கியிருந்த சுமார் 100 இந்திய மாணவர்கள் ஆர்மீனியா வழியாக பாதுகாப்பாக தாயகம் திரும்ப உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாணவர் அமைப்பின் தகவல்படி, எல்லை கடந்து ஆர்மீனியா சென்றடைந்த இவர்கள் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் டெல்லி வந்தடைவார்கள்.
துபாய் வழியாக இயக்கப்படும் பயணிகள் விமானங்கள் மூலம் இந்த மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். மத்திய வெளியுறவு அமைச்சகம் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதிகாரப்பூர்வ மீட்புத் திட்டம் அறிவிக்கப்படாவிட்டாலும் அவர்கள் வணிக ரீதியிலான விமானங்கள் மூலம் நாடு திரும்புவது குறிப்பிடத்தக்கது.