ஸ்டாலினுக்குச் செக்! விஜய்யின் வருகையால் திமுகவிற்கு ஆபத்து: டிடிவி தினகரன் அதிரடி கணிப்பு!

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகம் தற்போது போதைப்பொருட்களின் கூடாரமாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் வருகை திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் உண்மையான ஒற்றுமை இல்லை என விமர்சித்த அவர், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ‘அம்மாவின் ஆட்சியை’ அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த முறை தாங்கள் தனித்து போட்டியிட்டது திமுகவிற்குச் சாதகமானது, ஆனால் இந்த முறை வலுவான கூட்டணியால் அந்த வாய்ப்பு கிடைக்காது என்றார். சில கட்சிகள் வேட்பாளர்களுக்காகப் பேரம் பேசுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.