புறாக்களுக்கு தீவனம் போட்டால் இவ்வளவு தண்டனையா? 71 வயது இந்தியப் பெண்மணிக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம்!
February 9, 2026

சிங்கப்பூரில் புறாக்களுக்குத் தீவனம் அளித்த 71 வயது இந்தியப் பெண்மணி ஷண்முகநாதன் ஷாமலாவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் சுமார் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே எச்சரிக்கப்பட்டும், கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது முறை சட்டத்தை மீறி அவர் புறாக்களுக்கு உணவு அளித்ததால், வனவிலங்கு சட்டத்தின் கீழ் இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தான் வேலையில்லாமல் இருப்பதாகவும், இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியாது என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இருப்பினும், சட்டத்தை மதிக்காமல் தொடர்ந்து விதிகளை மீறியதால் அவருக்குக் கருணை காட்ட முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. சிங்கப்பூரில் பொது இடங்களில் பறவைகளுக்கு உணவளிப்பது குற்றமாகக் கருதப்படுவதால், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.