அடல் பிஹாரி வாஜ்பாய் செய்த அற்புதம் – சத்தீஸ்கர் உருவான ரகசியத்தை உடைத்த அமித் ஷா

அடல் பிஹாரி வாஜ்பாய் செய்த அற்புதம் – சத்தீஸ்கர் உருவான ரகசியத்தை உடைத்த அமித் ஷா

ராய்ப்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிறிய மாநிலங்கள் உருவாக்கம் என்பது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல, அது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வழிமுறை என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் புதிய மாநில கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அமைதியான முறையில் சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை உருவாக்கி சாதனை படைத்ததாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளுக்கு சித்தாந்தம் மிக முக்கியம் என்று வலியுறுத்திய அமித் ஷா, வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் ஆட்சிக் காலங்களை ஒப்பிட்டுப் பேசினார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது ஏற்பட்ட குழப்பங்களைச் சுட்டிக்காட்டிய அவர், முறையான சித்தாந்தம் இல்லாத கட்சிகளால் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *