விஜய் பாஜக கூட்டணி விவகாரம் பிஸ்மியின் அதிரடி போஸ்ட்டால் கிளம்பிய அரசியல் புயல்

விஜய் பாஜக கூட்டணி விவகாரம் பிஸ்மியின் அதிரடி போஸ்ட்டால் கிளம்பிய அரசியல் புயல்

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தவெக மற்றும் பாஜக இடையே கூட்டணி அமையலாம் என்ற தகவல் விவாதப் பொருளாகியுள்ளது. இந்நிலையில், கொள்கை எதிரியுடன் கூட்டணி வைப்பது அரசியல் விபச்சாரம் என பிஸ்மி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு பதிவில், திமுகவை வீழ்த்த பாஜகவுடன் இணைவதை தனிப்பட்ட வாழ்க்கை உதாரணத்துடன் ஒப்பிட்டு அவர் விமர்சித்துள்ளார். விஜய்யின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. இக்கூட்டணி குறித்த விஜய்யின் அடுத்தகட்ட நகர்வை அரசியல் வட்டாரம் உற்று நோக்குகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *