தமிழகத்தை உலுக்கிய மாணவி கொலை வழக்கில் முற்றுகை போராட்டம் நடத்திய ராஜேஸ்வரி பிரியா கைது

தமிழகத்தை உலுக்கிய மாணவி கொலை வழக்கில் முற்றுகை போராட்டம் நடத்திய ராஜேஸ்வரி பிரியா கைது

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் 17 வயது மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் கூறி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்து மக்கள் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா மற்றும் அவரது ஆதரவாளர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டபோது காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராஜேஸ்வரி பிரியா, மாநிலத்தில் பெருகி வரும் குற்றங்களைத் தடுக்கத் தவறிய அரசு, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களைத் தடுப்பதில் மட்டும் தீவிரம் காட்டுவதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *