சென்னையின் வளர்ச்சியைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டம் ஒழுங்கு குறித்து நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

சென்னையின் வளர்ச்சியைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டம் ஒழுங்கு குறித்து நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரை நூற்றாண்டு வளர்ச்சியைச் சாதித்துள்ளதாகக் கூறி முதல்வர் ஸ்டாலின் தனது சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார். 2030-க்குள் சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம் என அவர் பதிவிட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களைப் புறக்கணிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. முதல்வரின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சாதனைப் பட்டியலுக்குப் பதிலடியாக, கடந்த சில வாரங்களில் நடந்த தொடர் குற்றச்சம்பவங்களை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் காவல் மரணங்கள் குறித்து முதல்வர் மௌனம் காப்பது ஏன் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். வெறும் விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், மாநிலத்தின் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கைக் கண்ணைத் திறந்து பார்க்க வேண்டும் என மக்கள் ஆவேசமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *