வனவிலங்குகளைக் காப்பாற்ற நெடுஞ்சாலையில் புதிய ஏற்பாடு மத்தியப் பிரதேசத்தில் முதல் முறையாக நிதின் கட்கரி உத்தரவு

வனவிலங்குகளைக் காப்பாற்ற நெடுஞ்சாலையில் புதிய ஏற்பாடு மத்தியப் பிரதேசத்தில் முதல் முறையாக நிதின் கட்கரி உத்தரவு

இந்தியாவில் வனவிலங்குகள் பாதுகாப்பில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முயற்சியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தொடங்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு முக்கியமான பகுதியில் முதன்முறையாக சிகப்பு நிறத்தில் ‘டேபிள்-டாப்’ குறியீடுகள் (marking) அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வாகனங்களின் வேகத்தைக் குறைத்து, விலங்குகளின் உயிர்களைக் காக்க உதவும்.

சமீபத்தில் ஒரு சிறுத்தை குட்டி விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. சுமார் 5 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட இந்த சிகப்பு மேல்தளக் குறியீடுகள், ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை அளித்து, தானாகவே வேகத்தைக் குறைக்கத் தூண்டும். சுமார் ₹122 கோடி மதிப்பிலான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by Priyansh M Jain | Aerial DOP | Travel Content Creator (@shotbypriyansh)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *