வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம் ஒரே இரவில் நான்கு கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டதால் இந்துக்கள் அதிர்ச்சி

வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம் ஒரே இரவில் நான்கு கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டதால் இந்துக்கள் அதிர்ச்சி

வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியில் உள்ள அனோவாரா என்ற இடத்தில் நான்கு இந்து கோவில்களில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சாகாலி ஷீல்பாராவில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோவில் மற்றும் சீதளா கோவில் உட்பட நான்கு கோவில்களின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் தாமிரப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே ஜெஸூர் பகுதியில் கோவில்கள் தாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சிட்டகாங்கில் நடைபெற்றுள்ள இந்தத் திருட்டுச் சம்பவம் சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது. கோவில்களில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை இழந்த மக்கள் கடும் வேதனையில் உள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *