காதலித்தால் 31 ஆயிரம் திருமணத்திற்கு 25 லட்சம் ரூபாய் அள்ளித்தரும் அரசு

தென் கொரியாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவில் குறைந்து வருவதால், அந்நாட்டு அரசு இளைஞர்களைக் கவரும் வகையில் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் குறைந்து வருவதால், அங்கு முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த மக்கள் தொகை நெருக்கடியைச் சமாளிக்க அரசு தற்போது நிதியுதவி வழங்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், டேட்டிங் செல்லும் இளைஞர்களுக்கு சுமார் 31 ஆயிரம் ரூபாயும், திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளுக்கு 25 லட்சம் ரூபாய் வரையும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இளைஞர்களைத் திருமண வாழ்க்கையை நோக்கி ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் மக்கள் தொகை சரிவைத் தடுத்து நிறுத்த முடியும் என அந்நாட்டு அரசு பெரிதும் நம்புகிறது.