கம்பீரின் பதவிக்கு வந்த ஆபத்து லக்ஷ்மணன் எடுத்த முடிவால் தப்பிய இந்திய பயிற்சியாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் செயல்பாடு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கம்பீரை பதவியிலிருந்து நீக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்குப் பதிலாக விவிஎஸ் லக்ஷ்மணனை நியமிக்க பிசிசிஐ முயற்சி செய்த போதிலும், அவர் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
தற்போது பெங்களூருவில் உள்ள ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ பிரிவில் பணியாற்றி வரும் லக்ஷ்மணன், அதே பணியில் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே கம்பீரின் பயிற்சியாளர் பதவி தற்காலிகமாகத் தப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அணியின் அடுத்தடுத்த ஆட்டங்களில் முன்னேற்றம் இல்லையெனில் கம்பீரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் சந்தேகமில்லை என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.