லாகூரில் அல்லாமா இக்பால் சிலையை சிறுவர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ
December 18, 2025

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குல்ஷன்-இ-இக்பால் பூங்காவில், அந்நாட்டின் தேசிய கவிஞர் அல்லாமா இக்பாலின் சிலையைச் சிறுவர்கள் சிலர் கன்னத்தில் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு முதியவரின் உதவியுடன் சிலைக்கு அருகில் செல்லும் சிறுவர்கள், கல்விச் சுமைக்கு இக்பாலே காரணம் எனக் கூறி சிலையடிப் மதிக்காமல் நடந்து கொள்கின்றனர்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசியத் தலைவர்கள் மற்றும் நினைவுச் சின்னங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நெட்டிசன்கள், இது அந்நாட்டின் கல்வி மற்றும் சமூக விழுமியங்களின் வீழ்ச்சியைக் காட்டுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
Visual from Lahore: kids slapping poet Allama Iqbal's statue installed in a park 🤣🤣 pic.twitter.com/CQCEx9JwIO
— Koustuv 🇮🇳 🧭 (@srdmk01) December 17, 2025