அபிஷேகத்தின் போது கண்திறக்கும் பத்ரகாளி அம்மன் வைரல் வீடியோவால் பக்தர்கள் வியப்பு
December 18, 2025

தெலுங்கானாவில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் நடக்கும் அதிசய நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. சிலைக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யும் போது, அம்மன் தனது கண்களை மூடிக்கொள்வது போன்றும், பின்னர் தண்ணீர் ஊற்றியதும் கண்களைத் திறப்பது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த காட்சியைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.
இந்த நிகழ்வு தெய்வீக சக்தியா அல்லது சிலையின் தனித்துவமான வடிவமைப்பா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், மக்களின் நம்பிக்கை வலுவடைந்துள்ளது. இந்த அதிசயத்தைக் காண தினந்தோறும் ஏராளமானோர் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். மர்மம் விலகாவிட்டாலும் இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
Witness the magic of Maa Bhadrakali's eyes during divine Abhishekam 🙏
— Raghu (@IndiaTales7) October 7, 2024
pic.twitter.com/WcZdgkEVC2