வளைகுடா நாடுகளில் இந்தியர்களை ரஃபிக் என்று அழைப்பது ஏன் தெரியுமா?

வளைகுடா நாடுகளில் இந்தியர்களை ரஃபிக் என்று அழைப்பது ஏன் தெரியுமா?

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ‘ரஃபிக்’ என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. அரபு மொழியில் இதற்கு ‘நண்பன்’ என்று பொருள். 1970-களில் மொழிப் பிரச்சனை காரணமாகவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் பெயர்களை நினைவில் கொள்வது கடினமாக இருந்ததாலும், முதலாளிகள் அனைவரையும் பொதுவாக இவ்வாறு அழைக்கத் தொடங்கினர்.

காலப்போக்கில் இந்த வார்த்தையின் பயன்பாடு பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண அழைப்பாகத் தொடங்கி, பின்னர் சில காலங்களில் கிண்டலாகப் பார்க்கப்பட்டாலும், தற்போது இது மரியாதைக்குரிய விளிச்சொல்லாகவே கருதப்படுகிறது. இந்தியாவில் நாம் ‘பாய் சாப்’ என்று அழைப்பது போலவே, வளைகுடாவில் அறிமுகமில்லாதவர்களை அன்புடன் அழைக்க ‘ரஃபிக்’ அல்லது ‘சதிக்’ போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *