ரோஹித் ஷெட்டி வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்திய பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

ரோஹித் ஷெட்டி வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்திய பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

மும்பை ஜூஹு பகுதியில் உள்ள பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் முன்பு சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் நான்கு முதல் ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மும்பை காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து ஐந்து பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்தத் தாக்குதலுக்கு சமூக வலைதளங்கள் மூலம் பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தகவலின் உண்மைத்தன்மை குறித்து காவல்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. ரோஹித் ஷெட்டியின் வீட்டிற்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *