பயங்கர விபத்து வெடித்துச் சிதறிய பைக் இருவர் துடிதுடிக்க உயிரிழப்பு

பயங்கர விபத்து வெடித்துச் சிதறிய பைக் இருவர் துடிதுடிக்க உயிரிழப்பு

பிரேசிலின் சுவிஸ்கா பகுதியில் உள்ள ‘மரண வளைவில்’ அதிவேகமாக வந்த பைக்கும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு போல வெடித்துத் தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணம் செய்த 42 வயதான டால்மிர் மற்றும் 37 வயதான ஜோசியன் ஆகிய இரு உறவினர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தின் பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த மோதலில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது, ஆனால் அதன் 72 வயது ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அதிவேகமே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அடிக்கடி விபத்துகள் நடக்கும் இந்த ஆபத்தான வளைவில் போதிய பாதுகாப்பு வசதிகளைச் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *