டி20 உலகக்கோப்பை ஒரு உண்மையான உலகக்கோப்பையே இல்லை என்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
February 1, 2026

டி20 உலகக்கோப்பை தொடரை ஒரு உண்மையான உலகக்கோப்பையாக கருத முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தொடரை, 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் ஒப்பிடவே முடியாது என்பது அவரது கருத்தாக உள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை மட்டுமே உண்மையான கௌரவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொடரை ‘உலகக்கோப்பை’ என்று அழைப்பதை விட அதன் பழைய பெயரான ‘வேர்ல்ட் டி20’ என்று அழைக்கவே தான் விரும்புவதாக அவர் கூறினார். மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.