மெஸ்ஸி விவகாரத்தில் அதிரடி சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய அடுத்த நபர்
December 17, 2025

யுவ பாரதி மைதானத்தில் நடந்த மோதல் தொடர்பாக பிதான்நகர் தெற்கு போலீசார் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். தாபா பகுதியைச் சேர்ந்த ரூபக் மண்டல் என்பவர் பிடிபட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. முன்னதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கைது நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் கண்டறியும் முயற்சியில் புலனாய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.