யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து 13 பேர் உடல் கருகி பலி
December 17, 2025

மதுரா அருகே யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் கடும் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதில் 13 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாகினர். முதல் விபத்துக்குப் பிறகு வாகனத்தைச் சோதனையிட பயணிகள் சாலையில் இறங்கியபோது, பின்னால் வந்த பேருந்துகள் மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மோதிய வேகத்தில் பேருந்துகள் தீப்பற்றி எரிந்ததால் சடலங்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பனிமூட்டத்தின் போது போக்குவரத்தை முறைப்படுத்தத் தவறிய நிர்வாகத்தின் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.