மணல் கடத்தல் லாரி மோதி ஆம்புலன்ஸில் சென்ற தாய் மகள் கொடூர மரணம்

மணல் கடத்தல் லாரி மோதி ஆம்புலன்ஸில் சென்ற தாய் மகள் கொடூர மரணம்

பட்டுக்கோட்டை அருகே தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் டிப்பா் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் செல்லாச்சி மற்றும் அவரது மகள் ஃபைரோஸ் பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில் இந்த சோகம் நிகழ்ந்தது. விபத்தில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மற்றொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில் தவிடு ஏற்றிச் செல்வதாகக் கூறி மணல் கடத்தலில் ஈடுபட்ட செல்வாக்கு மிக்க நபர்களுக்குச் சொந்தமான லாரியே இந்த விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. சட்டவிரோத செயல்களால் இரு உயிர்கள் பறிபோயுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *