ஈரான் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானுடன் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் மீதான தாக்குதலை ஏப்ரல் 6 வரை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். குறிப்பாக, ஈரான் கோரிக்கையை ஏற்று அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 10 எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சுமுக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கவும், உலகப் பொருளாதார பாதிப்பைக் குறைக்கவும் இந்த 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் நீடித்து வரும் மோதலில் இருதரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தற்காலிக போர்நிறுத்தம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மீண்டும் போர் தொடங்கும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது.