தேர்தல் ஆணையத்தின் அதிரடி தடையால் விஜய்யின் வேட்பாளர் அறிமுக விழா திடீர் மாற்றம்
March 27, 2026

தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறவிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைக்காததால் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் 110 வேட்பாளர்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் அனுமதி இருந்தும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, வருகிற மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அன்று தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுவதால் தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.