நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா

நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா

அகமதாபாத் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றார். பேட்டிங் வரிசையில் பாகிஸ்தானின் சாஹுப்சாதா ஃபர்ஹான் 383 ரன்களுடன் முதலிடம் பிடித்தார், சஞ்சு சாம்சன் 321 ரன்களைக் குவித்துள்ளார்.

பந்துவீச்சில் இந்திய வீரர்கள் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அமெரிக்காவின் ஷாட்லி மற்றும் ஜிம்பாப்வேயின் முஜரபானி ஆகியோர் தலா 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சாளராக மேற்கிந்தியத் தீவுகளின் ரொமாரியா ஷெப்பர்ட் சாதனை படைத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *