திரிஷாவுடன் திருமண நிகழ்வில் பங்கேற்ற விஜய் தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கடும் கண்டனம்
March 9, 2026

தவெக தலைவர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யாத நிலையில், நடிகை திரிஷாவுடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது கலாச்சார சீர்கேடு என அக்கட்சியின் பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் விமர்சித்துள்ளார். விஜய்யின் குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பிள்ளைகளின் நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், இது ஒரு சரியான குடும்ப அமைப்பு இல்லை எனக் கூறினார்.
விஜய்யை முதல்வராக்க தொண்டர்கள் உழைக்கும் வேளையில், அவரது இத்தகைய நடவடிக்கைகள் அதிர்ச்சியளிப்பதாக ரஞ்சனா குறிப்பிட்டார். மகளிர் தினத்தில் கண்ணியம் பற்றிப் பேசிவிட்டு, மனைவியின் புகார்களுக்கு மத்தியில் ஒரு நடிகையுடன் பொதுவெளியில் தோன்றுவது அரசியல் ரீதியாக அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.