சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விஜய்க்கு ஒரே நாளில் பேரிடி

சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விஜய்க்கு ஒரே நாளில் பேரிடி

நடிகர் விஜய்க்கு இன்று அடுத்தடுத்து இரு பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. ஒருபுறம் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறுதணிக்கை குழு உறுப்பினர் உடல்நலக்குறைவால் தணிக்கை தள்ளிப்போயுள்ளது. மறுபுறம், கரூர் தேர்தல் பொதுக்கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக சிபிஐ நாளை நேரில் ஆஜராகும்படி விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

வேட்பாளர் நேர்காணல் தொடங்கவிருந்த நிலையில் இந்த சிபிஐ விசாரணை அரசியல் ரீதியாக அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கை தாமதமானால் தேர்தல் நடத்தை விதிகளால் படம் வெளியாவதிலும் சிக்கல் நீடிக்கும். ஒரே நாளில் சினிமா மற்றும் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த இரட்டை அதிர்ச்சியால் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *